ராஜீவ் காந்தி 1984 முதல் 1989 வரையில் இந்தியாவின் பிரதமராக பணியாற்றினார். 1989-ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. ஜனதா கட்சி சார்பில் பாஜக ஆதரவுடன் வி.பி.சிங் பிரதமரானார். ஆட்சி கவிழ்ந்த பின் 1991-ல் மக்களவை தேர்தல் நடைபெற்றது. இம்முறை ஆட்சியில் தவறுகளை திருத்தி கொள்வேன் என்ற ராஜீவ் காந்தி மக்கள் நல திட்டங்களை செயல்படுத்த நிபுணர் குழுக்களை அமைத்தார். ஆனால் அதே ஆண்டு தேர்தலுக்கு முன்னரே ராஜீவ் மரணமடைந்தார்.