குடிநீர் விற்று ரூ.14.85 கோடி வருவாய் ஈட்டிய ரயில்வே

16154பார்த்தது
குடிநீர் விற்று ரூ.14.85 கோடி வருவாய் ஈட்டிய ரயில்வே
கடந்த 3 மாதங்களில் 'ரயில் நீர்' பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் விற்பனை மூலம் தெற்கு ரயில்வேக்கு ரூ.14.85 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இந்த காலகட்டத்தில் மொத்தம் 99 லட்சம் ஒரு லிட்டர் ரயில் நீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ரயில் நிலையங்களில் 59 லட்சம் பாட்டில்கள் விற்பனையாகியுள்ளது, தெற்கு ரயில்வேயால் இயக்கப்படும் 630 ரயில் சேவைகளில் 40 லட்சம் பாட்டில்கள் விற்பனையாகியுள்ளன. தண்ணீர் பாட்டிலின் விலை லிட்டருக்கு 15 ரூபாய். தண்ணீர் விற்பனை மூலம் ரயில்வேக்கு தினமும் ரூ.65,000 வருமானம் கிடைப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல் ரயில் நீர் உற்பத்தி ஆலை 2003இல் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தின் (IRCTC) கீழ் நிறுவப்பட்டது. தற்போது, ​​நாடு முழுவதும் உள்ள 14 ஆலைகள் தினசரி 18.40 லட்சம் பாட்டில் தண்ணீர் உற்பத்தி செய்கின்றன. சென்னை ஆலையில் தினமும் 1.8 லட்சம் பாட்டில் தண்ணீர் உற்பத்தி செய்யப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி