விராலிமலையை சேர்ந்த கருப்பையா இவரது 2ஆவது மகன் சரவணன் தனது சகோதரரை பார்க்க செல்வதாக கூறி சென்ற நிலையில், சரவணன் திருச்சி அரசு மருத்துவமனையில் தலையில் காயத்துடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இறந்து விட்டதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் கருப்பையா போலீசில் புகார் அளித்துள்ளார். தலையில் காயம் இருந்ததால் மர்ம மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.