ஆவணத்தான கோட்டையை சேர்ந்த முத்தமிழ்மாறன் (30). இவர் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். காதல் மனைவி பிரிந்த சோகத்தில்இருந்த முத்தமிழ் மாறன் திருச்சி விமான நிலையம் வயர்லெஸ் ரோட்டில் ஓர் விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். விமான நிலைய போலீசார் விசாரணை நடத்தினர்.