சாலை சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை!

53பார்த்தது
சாலை சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை!
புதுக்கோட்டை மாவட்டம், பிசானத்தூர் ஊராட்சியில் உள்ள காளியம்மன் கோயில், ஞானம்மாள் கோயில், ஆதி திராவிடர்தெரு ஆகியவற்றுக்கு செல்லும் சாலையை சீரமைத்து தர வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஊரில் இருந்து ஞானம்பாள் கோயில் வரை உள்ள சாலை மிகவும் பழுதடைந்து போக்குவரத்துக்கு ஏற்ற நிலையில் இல்லை எனவும், மழைக்காலங்களில் இந்தப் பாதை பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாகவும் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, காளியம்மன் கோயிலுக்கு செல்லும் சாலையை சீர் செய்து சாலையின் இருபுறமும் கழிவுநீர் செல்லும் வாய்க்கால் அமைத்து தர வேண்டும் என இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி