திருமயம்: வீட்டு வாசலில் மயங்கியவர் மரணம்!

3265பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சந்தப்பேட்டை பகுதியை சேர்ந்த வீரப்பன் என்பவரின் மகன் சுரேஷ்(வயது 44). இவர் நேற்று முன்தினம் அதிகாலை 2 மணி அளவில் தனது வீட்டு வாசலில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதை பார்த்த உறவினர்கள் உடனடியாக மீட்டு திருமயம் அரசு மருத்துவமனையிலும் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிளும் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் மயங்கிய நிலையில் இருந்தவாறே நேற்று காலை 9 மணி அளவில் திடீரென மரணம் அடைந்தார்.

இதையடுத்து அவரது உடல் உடற் கூறுவாய் விற்காக அனுப்பப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கும் வரை மயக்கிய நிலையில் இருந்ததால் அவர் எதனால் இறந்தார் என்பது போலீஸ் விசாரணையில் உடற்கூறு ஆய்விற்கு பிறகு தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து திருமயம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி