கண்டியாந்தத்தில் மீன்பிடித் திருவிழா!

66பார்த்தது
கண்டியாந்தத்தில் மீன்பிடித் திருவிழா!
பொன்னமராவதி அருகே கண்டியா நத்தம் ஊராட்சியில் உள்ள சித்தனத்தான் கண்மாயில் கோடைக்காலத்தை முன்னிட்டும், ஊர்மக்கள் ஒற்றுமைக்காகவும், நன்றாக மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும் மீன்பிடி திருவிழா நடந்தது.
இதில் க. புதுப்பட்டி, கேசரா பட்டி, கண்டியாநத்தம், ஆலவயல், துாத்துார், உலகம்பட்டி உட்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் பாரம்பரிய முறைப்படி மீன்பிடி உபகரணங்களான ஊத்தா, வலை, பரி, கச்சா ஆகியவற்றை கொண்டு மீன்பிடித்தனர். இதில் நாட்டு வகை மீன்களான விரால், ஜிலேபி, கெண்டை, குரவை உள்ளிட்ட பல்வேறு வகை மீன்கள் கிடைத்தன.
அவற்றை உற்சாகத்துடன் வீட்டுக்கு கொண்டு சென்றனர். அதேபோல் மூலங்குடி பெரிய கண்மாயில் நடந்த மீன்பிடி திருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்று மீன்பிடிக்க தொடங்கினர். ஆனால், கண்மாயில் சிறிதளவு மீன் கள்கூட கிடைக்காததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி