கோட்டைப்பட்டினம் ராம் நகரை சேர்ந்தவர் வீரையன் (70). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 8ஆம் தேதி மாலை 4 மணியளவில் வீட்டில் இருந்தவர் வெளியே சென்றார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது மகன் பாண்டி அளித்த புகாரின் பேரில் ஜெகதாபட்டினம் போலீசார் வழக்குப் பதிவு செய்து காணாமல் போனவரை தேடி வருகின்றனர்.