புதுக்கோட்டை மாவட்டம் எஸ் குளவாய்ப்பட்டியில் மக்களுடன் முதல்வர் முகாமை துவக்கி வைத்த தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை தமிழக முதல்வர் வழங்குவதாகவும் இந்தியாவிலேயே 3500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து 1 லட்சம் பேருக்கு வீடு கட்டுவதற்கு மகத்தான திட்டத்தை தந்தவர் தமிழக முதல்வர் என பெருமிதம் தெரிவித்தார். ஆர்டிஓ ஐஸ்வர்யா தலைமையில் நடைபெற்ற நிகழ்வு ஏராளமான பங்கேற்றனர்.