“ஒரே நாடு, ஒரே தேர்தல்" அரசியலமைப்புக்கு எதிரானது - கனிமொழி

53பார்த்தது
மாநில சுயாட்சி, கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக கொண்டு வரப்பட்ட ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மாநில உரிமைகளுக்கு எதிரானது என திமுக எம்.பி கனிமொழி கூறியுள்ளார். டெல்லி நாடாளுமன்ற வளகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி, "இது அதிபர் ஆட்சிக்கே வழிவகுக்கும். மாநில கட்சிகளை வலுவிழக்கச் செய்யும். இம்மசோதாவை திமுக தொடர்ந்து எதிர்க்கும். முக்கிய பிரச்சனைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பக் கூட இந்த மசோதாவை கொண்டு வந்திருக்கலாம்” என்று பேட்டியளித்துள்ளார்.

நன்றி: PuthiyathalaimuraiTV

தொடர்புடைய செய்தி