புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள எஸ். குளவாய்ப்பட்டியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் பங்கேற்றுப் பேசுகையில், அண்மையில் ஊரகப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்ட இந்தத் திட்டத்தில், இதுவரை 13 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 495 கிராம ஊராட்சிகளில் 66 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த A முகாமில் பொதுமக்கள் அளித்தமனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
முன்னதாக, வெள்ளக்கொல்லை பகுதியில், போக்குவரத்துத் துறையின் சார்பில், அறந்தாங்கி முதல் ஆலங்குடி வரையிலான புதிய நகர பேருந்தையும், ஆலங்குடி பேருந்து நிலையம் அருகில், அம்ரூத் 2. 0 திட்டத்தின்கீழ் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கலைஞர் பூங்கா, ஆலங்குடி பேரூராட்சி பொது நிதியிலிருந்து, ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 30, 000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியையும் அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதனமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தார்.
நிகழ்வுகளில், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பா. ஐஸ்வர்யா, வட்டாட்சியர் பெரியநாயகி, திருவரங்குளம் ஒன்றியக் குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, ஆலங்குடி பேரூராட்சித் தலைவர் ராசி முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.