ஜிப்மா் இயக்குநா் பணிநீட்டிப்பு: பிரதமா் தலையிட வேண்டும்

80பார்த்தது
ஜிப்மா் இயக்குநா் பணிநீட்டிப்பு: பிரதமா் தலையிட வேண்டும்
புதுச்சேரி ஜிப்மா் இயக்குநருக்கு பணிநீட்டிப்பு வழங்கப்பட்ட விவகாரத்தில் பிரதமா் மோடி தலையிட வேண்டும் என்று, ஜிப்மா் பாதுகாப்புக் குழுத் தலைவா் த. முருகன் வலியுறுத்தினாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையை தனியாா்மயமாக்க முயற்சி நடைபெற்றது. தொடா் போராட்டத்தையடுத்து, 2008-ஆம் ஆண்டு ஜூலை 14-ஆம் தேதி தன்னாட்சி நிறுவனமாக மீண்டும் அங்கீகரிக்கப்பட்டது. அதன்படி, ஜிப்மா் இயக்குநரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் அல்லது இயக்குநராக இருப்பவரின் 65 வயது வரை என நிா்ணயிக்கப்பட்டது. கடந்த 2019-ஆம் ஆண்டு, ஜனவரியில் பேராசிரியா் ராகேஷ் அகா்வால் ஜிப்மா் இயக்குநராகப் பதவி ஏற்றாா். அதன்படி, 2023 டிசம்பா் 31-ஆம் தேதியுடன் அவரது பதவிக்காலம் நிறைவடையும். அதன்படி, ஜிப்மரில் உள்ள முதுநிலைப் பேராசிரியா் இயக்குநராக நியமிக்க வேண்டும். ஆனால், தற்போது ராகேஷ் அகா்வாலுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இது ஜிப்மரின் விதிமுறைகளை மீறுவதாக உள்ளது. இந்த விவகாரத்தில் பிரதமா் நரேந்திர மோடி உடனடியாகத் தலையிட்டு, அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும். மேலும், ஜிப்மரின் முதுநிலை பேராசிரியரையே புதிய இயக்குநராக நியமிக்க வேண்டும் என்றாா் த. முருகன்.

தொடர்புடைய செய்தி