கொம்பாக்கம் அருள்மிகு ஸ்ரீசெங்கழுநீர் அம்மன் ஆலய பூமி பூஜை

72பார்த்தது
கொம்பாக்கம் அருள்மிகு ஸ்ரீசெங்கழுநீர் அம்மன் ஆலய பூமி பூஜை
புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் தொகுதிக்கு உட்பட்ட, கொம்பாகம் அருள்மிகு ஸ்ரீசெங்கழுநீர் அம்மன் ஆலய பூமி பூஜை விழா இன்று (11. 02. 2024) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான சிவா கலந்துக்கொண்டனர். அப்போது சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா முதல்கட்டமாக தனது சொந்த நிதியிலிருந்து ரூ. 1, 01, 000 (ஒரு லட்சத்தி ஆயிரம் ரூபாய்) யை ஆலய நிர்வாக அதிகாரி உமாபதி மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் தேவநாதன், வேலு படையாட்சி, கந்தசாமி, ஜெகன்மோகன், செங்கேணி, எம்பெருமான், காமராஜ், நரசிங்கம், கலியபெருமாள், ஜெயபால், ஜனா, பெருமாள், முருகையன், கலி, ராமச்சந்திரன், தட்சிணாமூர்த்தி, பரதன், சுரேஷ், வாழுமுனி, துர்கா நகர் ரமேஷ், மணக்குள விநாயகர் சுரேஷ், முருகவேல், ராஜேஷ், சிவராஜ், துளசி, மணி, அருண், புருஷோத்தமன், ஹரிபுத்திரி, ஏழுமலை, தங்கராசு, பாவாடை, பாலமுருகன், காந்தி, இளவரசன் மற்றும் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி