நடத்தை விதிகளை மீறி தேர்தல் நடந்துள்ளதாக அதிமுக புகார்

586பார்த்தது
புதுச்சேரி உப்பளத்தில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக மாநில செயலாளர் அன்பழகன், நடைபெற்ற புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலில் முழுக்க முழுக்க சட்ட விதிகளுக்கு புறம்பாகவும், தேர்தல் நடத்தை விதிகளை மீறியும் தேர்தல் துறை அதிகாரிகளால் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும் இந்த தேர்தலில் ஆளும் கட்சியில் அதிகார பலம், காவல்துறையினருடைய ஒத்துழைப்பு, தேர்தல் துறை அலட்சியம் இவை அனைத்தையும் பயன்படுத்திக் கொண்டு ஆளும் பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் 50 கோடி ரூபாய் அளவிற்கு வாக்காளர்களுக்கு ஒவ்வொரு ஓட்டிற்கும் 500 ரூபாய் விதம் தங்கு தடையின்றி வழங்கியுள்ளார்.

அதேபோல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வைத்திலிங்கம் ஒரு வாக்குக்கு 200 ரூபாய் வீதம் 20 கோடி ரூபாய் வரை வழங்கியுள்ளதாக குற்றம்சாட்டிய அவர், இந்த தேர்தலில் அதிமுக சார்பில் பிடித்துக் கொடுத்ததாக இரண்டு பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாஜக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளதை நான் நிரூபித்தால் நமச்சிவாயம் அவர்கள் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய தயாரா? என அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கேள்வி எழுப்பியுள்ளார். பேட்டியின் போது புதுச்சேரி நகர கழக செயலாளர் அன்பழகன் உடையார் உடனிருந்தார்.

தொடர்புடைய செய்தி