காரைக்காலில் செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன்: - காரைக்காலுக்கு 7 டி. எம். சி தண்ணீர் வரவேண்டும். இந்நேரம் 2. 5 டிஎம்சி தண்ணீர் வந்திருக்க வேண்டும் ஆனால் 0. 5 டிஎம்சி தான் வந்திருக்கிறது. இதனால் காவிரி நீர் மிகக்குறைந்த அளவே வந்துள்ளது கவலையளிக்கின்றது எனவும் நமக்கு தேவையான டி. எம். சி தண்ணீரை பெற வலியுறுத்தி வருகிறோம். மேலும் இதுகுறித்து மத்திய அரசிடம் மேலும் அழுத்தம் கொடுக்க உள்ளேன் என்று தெரிவித்தார்.