இஸ்ரோவின் எக்ஸ்போசாட் உள்ளிட்ட 11 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட். ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை 9.10 மணிக்கு ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. எக்ஸ்போசாட் செயற்கைக்கோளானது கருந்துளை, நியூட்ரான் நட்சத்திரங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்ய உள்ளது. 5 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்ட அந்த செயற்கைக்கோள் பூமியில் இருந்து சுமார் 650 கிலோ மீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப்படுகிறது.