பாதுகாப்பு குறைபாடு உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்தில் உள்ள 18 கிளைச்சிறைகளை மூட தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அங்கு பணியாற்றிக் கொண்டிருக்கும் அதிகாரிகளும், ஊழியர்களும் இதனால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே, கிளைச் சிறைச்சாலைகளை மூடும் நடவடிக்கையைக் கைவிட்டு, அவற்றின் பாதுகாப்பை அதிகரித்து, அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.