நாளை மறுநாள் தமிழகம் வரும் பிரதமர் மோடி

558பார்த்தது
நாளை மறுநாள் தமிழகம் வரும் பிரதமர் மோடி
தமிழ்நாட்டில் 19,850 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி நாளை மறுநாள் தமிழகம் வருகிறார். முதலில், திருச்சி விமான நிலையத்தில் ரூ.1200 கோடி செலவில் பன்னாட்டு விமான முனையம் சர்வதேச தரத்தில் கட்டப்பட்டு உள்ளது. இதை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள். பின்னர் தமிழகம் முழுக்க பல்வேறு நலத்திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு திருச்சி விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி