பிரதமர் மோடிக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு

544பார்த்தது
பிரதமர் மோடிக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு
பாரதிதாசன் பல்கலைகழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க திருச்சி வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திரமோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர். பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு பிரதமர் மோடி, பாதுகாப்பு வாகனங்கள் புடைசூழ சாலை மார்க்கமாக செல்கிறார். அவருக்கு வழிநெடுக பாஜகவினர், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். மேலும், இந்த நிகழ்ச்சிக்கு பிறகு திருச்சி விமான நிலைய பன்னாட்டு முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.

தொடர்புடைய செய்தி