விலை அதிகரிப்பு.. மணமக்களுக்கு பூண்டு மாலை

63பார்த்தது
விலை அதிகரிப்பு.. மணமக்களுக்கு பூண்டு மாலை
நாட்டில் கடந்த சில நாட்களாக பூண்டின் விலை அதிகரித்து வருகிறது. பூண்டு வாங்குவதற்கு தங்கம் விலை கொடுக்க வேண்டியதுள்ளது என பொதுமக்கள் புலம்பி வருகின்றனர். இந்நிலையில் சேலம் அம்மாபேட்டையில் நடைபெற்ற திருமண நிகழ்வில் மணமக்களுக்கு பூண்டால் கட்டப்பட்ட மாலையையும், 2 கிலோ பூண்டுகளையும் நடிகர்கள் பெஞ்சமின், முகமது காசிம் ஆகியோர் மணமக்களுக்கு பரிசாக வழங்கினர். பூண்டின் விலை உயர்ந்துள்ள நிலையில் மணமக்களுக்கு பூண்டை பரிசாக வழங்கிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி