'உருளைக்கிழங்கு செல்லக்குட்டி'.. கோட் வேர்டால் சிக்கிய போலீஸ்

78பார்த்தது
'உருளைக்கிழங்கு செல்லக்குட்டி'.. கோட் வேர்டால் சிக்கிய போலீஸ்
உத்தரபிரதேசம் மாநிலம் கன்னாஜ் பகுதியில் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வரும் ராம் கிரிபால் விவசாயி ஒருவரிடம் 5 கிலோ உருளை கிழங்கு வேண்டும் என கேட்டு செல்போனில் பேசிய ஆடியோ வெளியானது. அதற்கு அந்த விவசாயி 2 கிலோதான் தர முடியும் என கூறியிருந்தார். பின்னர் உருளை கிழங்கு என்பது கோட் வேர்டு என்பது தெரிய வந்தது. பணத்தை 'உருளைக்கிழங்கு' என கூறியுள்ளார். இந்த விஷயம் தெரியவந்ததையடுத்து ராம் கிரிபால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி