நெல்லை அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்தவர் வள்ளியம்மாள் (65). இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக விஜய்யின் ரசிகையாக இருந்து வருகிறார். விஜய்யின் முதல் படம் தொடங்கி, இன்று வரை அவரது படங்களைத் தியேட்டரில் பார்த்து வருகிறார். மேலும் வீடு முழுவதும் விஜய்யின் படங்களை மாட்டி வைத்துள்ளார். விஜய் அரசியலுக்கு வந்தது வருத்தம் என்றாலும், அவர் முதலமைச்சராகி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும், முதலமைச்சரோடு நிற்காமல் பிரதமராக வேண்டும் எனக் கூறியுள்ளார்.