6ஆம் கட்ட மக்களவைத் தேர்தல்: இன்று வாக்குப்பதிவு

74பார்த்தது
6ஆம் கட்ட மக்களவைத் தேர்தல்: இன்று வாக்குப்பதிவு
6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 மக்களவைத் தொகுதிகளில் 6ஆம் கட்ட மக்களவைத் தேர்தல் இன்று (மே 25) நடைபெறுகிறது. ஹரியானா (10), பீகார் (8), ஜார்கண்ட் (4), ஒடிசா (6), உத்தரப்பிரதேசம் (14), மேற்கு வங்கம் (8), டெல்லி (7), ஜம்மு காஷ்மீர் (1) உள்ளிட்ட 58 தொகுதிகளில் 6ஆம் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது.

இதில், முன்னாள் முதலமைச்சர்கள் மனோகர் லால் கட்டார், மெகபூபா முப்தி, முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி, மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் மகள் பன்சூரி ஸ்வராஜ் உட்பட மொத்தம் 889 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி