சீரான குடிநீர் வழங்குதல் தொடர்பாக ஆய்வு கூட்டம்

1106பார்த்தது
குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் பகுதிகளில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கிட எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் இயக்குநர் பொன்னையா தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம், முன்னிலையில் மே-2 ம் தேதி ஆட்சியரகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியர் கற்பகம் தெரிவிக்கையில்,

பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குடிநீர் பற்றாக்குறையினை களைவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குடிநீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என தெரிவித்தார்.

தொடர்ந்து ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித்துறையின் இயக்குநர் பொன்னையா தெரிவிக்கையில்,
கோடைக்காலத்தில் குடிநீர் பற்றாக்குறை உள்ள இடங்களில் பொதுமக்களுக்கு மாற்று வழிகளில் குடிநீர் வழங்கிட வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகளில் தண்ணீர் சேமித்து வழங்க வசதி உள்ள இடங்கள் குறித்து ஆய்வு செய்து தேவைப்படும் இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் கிணறுகள் அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் குழாய்கள் பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி