மது பாட்டில்களை விற்பனை செய்த நபர் கைது

72பார்த்தது
மது பாட்டில்களை விற்பனை செய்த நபர் கைது
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மது பாட்டில்களை சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்த நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர்.
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா மற்றும் சட்ட விரோதமாக மதுவிற்பனை, கள்ளச்சாராயம் காய்ச்சுதல், ஊறல் போடுதல் விற்பனை செய்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட வ. கீரனூர் கிராம பகுதியில் கள்ளத்தனமாக மதுவிற்பனை நடைபெறுவதாக கிடைத்த இரகசிய தகவலின்படி குன்னம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சரவணக்குமார் மற்றும் அவரது குழுவினர் சிறப்பு ரோந்து மேற்கொண்டுவந்த நிலையில் வ. கீரனூர் கிராமம் கக்கன் நகரை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரின் மகன் வேந்தன் (36) என்பவர் அவரது வீட்டிற்கு பின்புறம் சட்டத்திற்கு புறம்பாக மதுபாட்டில்களை விற்பனை செய்துகொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
வேந்தனை கைது செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரிடமிருந்து 180 ml அளவுள்ள 27 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி