பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) 2024-ஆம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை நடைபெறுகிறது.
விண்ணப்பக் கட்டணத் தொகை ரூ. 50/-, சேர்க்கை கட்டணம் ஒரு வருடம் தொழிற்பிரிவு பயிற்சி கட்டணம்- ரூ. 185/-, இரண்டு வருடம் தொழிற்பிரிவு பயிற்சி கட்டணம்- ரூ. 195/-, இணையதளம் வாயிலாக அரசு தொழிற்பயிற்சி நிலையத்திலேயே, 01. 09. 2024 முதல் 30. 09. 2024 வரை நேரடி சேர்க்கை நடைபெறுகிறது. பயிற்சியில் சேர விரும்புபவர் தங்களது அசல் கல்வி சான்றிதழ்களுடன் நேரில் வரவும். ஏற்கனவே பயிற்சியாளர்கள் சேர்க்கை நடைபெற்றதில் மீதமுள்ள காலியிடங்களுக்கு மட்டும் நேரடி சேர்க்கை நடைபெறுகிறது. காலியிடங்கள் மிக குறைவாக உள்ளதால் முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகிறது.
இந்த அறிய வாய்ப்பை எட்டாம் வகுப்பு தேர்ச்சி/ பத்தாம் வகுப்பு தேர்ச்சி/ பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி/ தோல்வி மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு முதல்வர், அரசு தொழிற்பயிற்சி நிலையம் பெரம்பலூர்- 9443852306, 9047949366 & 6379764520. முதல்வர், அரசு தொழிற்பயிற்சி நிலையம் ஆலத்தூர்- 9499055883 & 9499055884. முதல்வர், அரசு தொழிற்பயிற்சி நிலையம் குன்னம்- 9894697154 என்ற அலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் நேற்று(செப்.7) தெரிவித்துள்ளார்.