தவெக சார்பில் ஊடக விவாதங்களில் கலந்துகொள்பவர்கள்

83பார்த்தது
தவெக சார்பில் ஊடக விவாதங்களில் கலந்துகொள்பவர்கள்
நடிகர் விஜய் தற்போது கட்சி ஆரம்பித்து அதற்கு "தமிழக வெற்றி கழகம்" என பெயர் வைத்துள்ளார். இதனை இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், தமிழக வெற்றி கழகம் சார்பில் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் நடத்தப்படும் விவாதங்களில் தற்காலிகமாக கலந்து கொள்பவர்களின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வீர விக்னேஷ்வரன், லயோலா மணி, ராம்குமார், ஜெகதீஷ் ஆகியோரது பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பை தமிழக வெற்றி கழக பொதுச்செயலாலர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி