பள்ளிக்கரணை சதுப்பு நில காட்டுத்தீ - சீமான் வலியுறுத்தல்

77பார்த்தது
பள்ளிக்கரணை சதுப்பு நில காட்டுத்தீ - சீமான் வலியுறுத்தல்
பள்ளிக்கரணை (பெரும்பாக்கம்) சதுப்பு நிலப்பகுதியில் நேற்று ஏற்பட்ட காட்டுத்தீ முழுவதுமாக அணைக்கபட்டதை உறுதி செய்வதோடு பொதுமக்களையும், சூழலியலையும் பாதுகாத்திட துரித நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும் என நாம் தமிழர்‌ கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதியில் பல்வேறு ஆக்கிரமிப்புகள் மற்றும் அருகாமையில் இருக்கக்கூடியக் குப்பைக்கிடங்கிலிருந்து வெளியேறும் வேதிமப்பொருட்கள் ஆகியவற்றால் ஏற்படும் சூழலியல் சீர்கேடுகள் குறித்துத் தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சி எச்சரிக்கை விடுத்து வந்த நிலையில், தற்போது இந்தக் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இழந்த சதுப்புநிலப் பகுதிகளை மீட்டுருவாக்கம் செய்யும் நடவடிக்கைகளில் இனியாவது காலம் கடத்தாமலும், ஊழலின்றியும் அரசு ஈடுபட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி