விரைவில் முடிவுக்கு வரும் எதிர்நீச்சல் சீரியல்

16390பார்த்தது
விரைவில் முடிவுக்கு வரும் எதிர்நீச்சல் சீரியல்
சன் டிவியில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் எதிர்நீச்சல் என்ற சீரியல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் இந்த சீரியலில் குணசேகரன் என்ற கேரக்டரில் நடித்த ஜி மாரிமுத்து மறைந்த பின்னர் சீரியலில் சற்று தொய்வு ஏற்பட்டது. பின்னர் வேல ராமமூர்த்தி அந்த கதாபாத்திரத்தில் நடித்து விறுவிறுப்பு கூட்டினார். இந்நிலையில் அடுத்த மாதம் இந்த சீரியல் முடிவுக்கு வர இருப்பதாகவும் சமீபத்தில் இந்த சீரியலின் கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை அந்த சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதனால் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி