விசிக தலைவர் திருமாவளவனின் இன்று (ஆக.17) தனது 62வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.இந்த நிலையில், மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திருமாவளவனுக்கு தனது ‘X’ தளத்தில் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். மேலும், “ நமது மக்கள் அனைவருக்கும் சமூக நீதி மற்றும் சமத்துவத்தை நிலைநிறுத்துவதற்கும் பகிரப்பட்ட உறுதிப்பாட்டில் வேரூன்றிய நமது பிணைப்பு, தொடர்ந்து வலுவடையும் என்று நான் நம்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.