காவிரியில் இருந்து நீர் திறந்தது விடுவதற்கு முன்பாக, விவசாயிகளுக்கு விதை நெல், உரம் போன்ற இடுபொருள்கள், வங்கி கடன் ஆகியவை கொடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக அரசிற்கு வலியுறுத்தியுள்ளார். காவிரியில் திறக்கப்படும் தண்ணீர் குளம், குட்டை மற்றும் கடைமடை பகுதிகள் வரை செல்ல ஏதுவாக வாய்க்கால்கள், மதகுகளை பழுது நீக்கி சரி செய்யவும், கரைகளை பலப்படுத்தவும் வலியுறுத்தியுள்ளார்.