சிவகங்கை கொட்டகுடியை சேர்ந்தவர் ஓவியர் காளீஸ்வரன் (24). இவரது தாய் அரசு மாணவர் விடுதியில் பணியாற்றி சமீபத்தில் இறந்துவிட்டார். தாய் பார்த்த வேலையை கருணை அடிப்படையில் எதிர்பார்த்து காத்திருக்கின்றார். இந்நிலையில் அதே பகுதியில் உள்ள இளம் பெண்களை திருமணம் செய்வதாக கூறி பலத்காரம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சிவகங்கை மகளிர் போலீசில் புகார் அளித்துள்ளார். காளீஸ்வரனை கைது செய்து விசாரித்ததில், இரு பெண்களை ஏமாற்றியதை ஒப்புக் கொண்டுள்ளார்.