நிர்மலா சீதாராமனை பதவி நீக்கம் செய்யக் கோரி அதிகாரி கடிதம்!

119402பார்த்தது
நிர்மலா சீதாராமனை பதவி நீக்கம் செய்யக் கோரி அதிகாரி கடிதம்!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை பதவி நீக்கம் செய்யக் கோரி குடியரசுத் தலைவருக்கு சென்னை ஐஆர்எஸ் அதிகாரி கடிதம் அனுப்பியுள்ளார். அமலாக்கத்துறையை பாஜகவின் கொள்கையை அமல்படுத்தும் துறையாக மாற்றியுள்ளதாக சென்னை ஐஆர்எஸ் அதிகாரி பாலமுருகன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். சேலத்தைச் சேர்ந்த 2 விவசாயிகளுக்கு அனுப்பிய சம்மனில், சாதி பெயர் குறிப்பிட்ட விவகாரத்தில், அமலாக்கத்துறையின் நடவடிக்கையை கண்டித்து நடவடிக்கை கோரி கடிதம் அனுப்பியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி