கேரள திரையுலகின் நடிகர் சங்கமான ‘அம்மா’ அமைப்பில் இனி பொறுப்பு வகிக்கப்போவதில்லை என நடிகர் மோகன்லால் அறிவித்துள்ளார். பாலியல் சீண்டல்கள் குறித்த ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதையடுத்து பல முக்கிய நடிகர்கள் சிக்கினர். இந்த நிலையில், ‘அம்மா’ அமைப்பு மீது கடும் விமர்சனம் எழுந்தது. இதனை தொடர்ந்து தலைவர் பதவியில் இருந்து மோகன்லால் உள்ளிட்டோர் விலகினர். மலையாளத் திரையுலகம் சர்ச்சைகளால் அழிந்துவிடக் கூடாது என்று மோகன்லால் கூறியுள்ளார்.