உதகையில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை

61பார்த்தது
உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய தொடர் சாரல் மழை பெய்து வரும் நிலையில் கேத்தி காவல் நிலைய பகுதியில் ராட்சத மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு.


நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

இதனை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் சாரல் மழை காரணமாக ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்தும் மண் சரிவும் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று பெய்து வரும் காற்றுடன் கூடிய சாரல் மழை காரணமாக உதகையை அடுத்த கேத்தி பகுதியில் காவல் நிலைய வளாகத்தில் இருந்த ராட்சத மரம் ஒன்று முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது.

இதனை தொடர்ந்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் அப்பகுதியில் உள்ள கிராமப்புற பகுதிகளுக்கு செல்ல போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி