
நீலகிரி: எச்சரிக்கை..அடுத்த 3 மணி நேரத்தில் மழை கொட்டும்
இன்று (ஏப்ரல் 6) இரவு 7 மணிக்குள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.