வணிக நிறுவனங்களில் கருப்புக்கொடி கட்டி வியாபாரிகள் எதிர்ப்பு

68பார்த்தது
கூடலூரில் வணிக நிறுவனங்களில் கருப்புக்கொடி கட்டி வியாபாரிகள் எதிர்ப்பை தெரிவிக்கின்றன
ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்து நீலகிரி மாவட்டத்திற்கு இ_பாஸ் நடைமுறையை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் வாகனங்களும் வார இறுதி நாட்களில் 8000 வாகனங்களும் நீலகிரிக்குள் வர அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது இதனால் வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் குறிப்பாக இ-பாஸ் நடைமுறையை செய்யவும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் சோதனை என்ற பெயரில் மாவட்ட நிர்வாகம் அபராதம் விதிப்பதோடு கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் நீலகிரியில் சில்லஹள்ளா நீர் மின் நிலைய திட்டத்தை கைவிட வேண்டும் என உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாவட்டம் முழுவதும் உள்ள வியாபாரிகள் கருஞ்சட்டை அணிந்து கடைகளில் கருப்பு கொடியை கட்டி உள்ளனர். கூடலூர், பந்தலூர் , உள்ளிட்ட பகுதிகளில் வியாபார கடைகளில் கருப்புக் கொடி கட்டி தங்களது எதிர்ப்பையும் கோரிக்கைகளையும் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் ஏப்ரல் 2 ம் தேதி இந்த 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் பொது வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி