உதகை ஆணையர் ஜஹாங்கீர் பாஷா காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்

54பார்த்தது
உதகை நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம். *

கடந்த 9-ந் தேதி இரவு அவர் தனியார் வாகனத்தில் 11 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணத்துடன் சென்ற போது தொட்டபெட்டா பகுதியில் வைத்து நீலகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் மடக்கி பிடித்தனர்
இவர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடந்து வரும் நிலையில் இன்று காத்திருப்பாேர் பட்டியலுக்கு மாற்றி நகராட்களின் மண்டல நிர்வாக இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.



உதகை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புதிதாக தொடங்கிய ஜவுளிக்கடை கட்டடம், பார்க்கிங் டெண்டரை குறைவாக விட்டுபணம் பெற்றது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில்
நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா சனிக்கிழமை பணியை முடித்துக்கொண்டு சொந்த ஊரான சென்னைக்கு கோத்தகிரி சாலை வழியாக வாடகை காரில் சென்று கொண்டிருந்த போது ரகசிய தகவலின் அடிப்படையில்

லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயக்குமார், ஆய்வாளர் பரிமளாதேவி, சப்- இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் அடங்கிய குழுவினருக்கு தொட்டபெட்டா சந்திப்பு பகுதியில் நகராட்சி ஆணையாளரின் காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் கணக்கில் வராத ரூ. 11 லட்சத்து 70 ஆயிரம் பணம் இருந்தது தெரிய வந்தது.

பணம் பறிமுதல் செய்யப்பட்டு தீவிர விசாரணை நடந்தவந்த நிலையில் தற்போது இவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப் பட்டுள்ளார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி