கோடை வெயிலின் தாக்கம் தேயிலை செடிகள் கருகும் அபாயம்....

65பார்த்தது
கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் தேயிலை செடிகள் கருகும் அபாயம்.

கோத்தகிரி பகுதியில் கோடை வெயிலில் தாக்கத்தில் இருந்து தேயிலை கொழுந்துகளைப் பாதுகாக்க செடிகள் மீது தேயிலை கொழுந்துகளுக்கு 'ஸ்பிரிங்ளர்' மூலம் தண்ணீர் பாய்ச்சும் பணி மூலம் தண்ணீர் பாய்ச்சி, தேயிலை செடிகளை விவசாயிகள் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கடும் வெயிலுடன் கூடிய கடும் வறட்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.

இதன் காரணமாக தேயிலை செடிகளில் சிவப்பு சிலந்தி நோய் தாக்கி வந்தது. இதனால் தேயிலை கொழுந்துகள் நிறம் மாறி, சாகுபடி வெகுவாக குறைந்து வருகிறது. எனவே நோயின் தாக்கத்தில் இருந்து தேயிலை செடிகளை பாதுகாக்க போதுமான தண்ணீர் வசதியுள்ள பகுதிகளில் விவசாயிகள் தேயிலைத் தோட்டங்களுக்கு ஸ்பிரிங்ளர் மூலம் தேயிலைத் தண்ணீர் பாய்ச்சி வருகிறார்கள்.

இதன் காரணமாக மீண்டும் தேயிலை செடிகளில் கொழுந்துகள் செழித்து வளர்வதுடன், சாகுபடியும் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி