சிவன் கோவில்களில் பங்குனி மாத வளர்பிறை பிரதோஷ பூஜை

1064பார்த்தது
ஒவ்வொரு மாதமும் சிவன் கோவில்களில் பிரதோஷம் மற்றும் சனி பிரதோஷ நாட்களில் யாக பூஜை, அபிஷேக பூஜை நடத்தப்பட்டு, சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.

குறிப்பாக பங்குனி மாத வளர்பிறை வெள்ளிக்கிழமை சுக்கிரவார பிரதோஷ நாளில் சிவ தரிசனம் செய்தால் கடன் பிரச்சினை தீர்ந்து செல்வ வளம் பெருகும். ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் எல்லா தோஷமும் நீங்கி விடும் என்பது ஐதீகம்.

இதையொட்டி பங்குனி மாத பிரதோஷ நாளான இன்று கோத்தகிரி சக்தி மலை முருகன் கோவிலில் உள்ள லிங்கேஸ்வரருக்கு மாலை 4. 30 மணி முதல் மாலை 6. 30 மணி வரை லிங்கேஸ்வரருக்கு பால், தேன் , தயிர் , சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வில்வம், அரளி , தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்த பின் அபிஷேக பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

மேலும் சிவபெருமானின் வாகனமான நந்தி தேவருக்கும் அபிஷேகம் செய்யப்பட்டு, எண்ணெய், பால் , தயிர், சந்தனம், இளநீர் போன்றவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அருகம்புல் சாற்றி மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, அர்ச்சனை மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னப் பிரசாதம் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி