தனி சின்னத்தில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சி

578பார்த்தது
தனி சின்னத்தில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சி
அதிமுக கூட்டணியில் தென்காசி (தனி) தொகுதியில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சி தனி சின்னத்தில் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடப் போவதில்லை என்றும், புதிய தமிழகம் கட்சி 'டிவி' சின்னத்தில் போட்டியிட விரும்புவதாகவும் கூறியுள்ளார். 'டிவி' சின்னம் கிடைக்காத பட்சம் வேறு ஒரு சின்னம் கேட்டுப் பெறுவோம் என்றும் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். கடந்த 6 முறை இதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்த கிருஷ்ணசாமி, 7வது முறையாக போட்டியிடுகிறார்.

முன்னதாக தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதியில், கிருஷ்ணசாமி 2 முறை எம்எல்ஏவாக பதவி வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.