நாடு முழுவதும் 10ஆம் தேதி ரயில் மறியல்

163136பார்த்தது
நாடு முழுவதும் 10ஆம் தேதி ரயில் மறியல்
நாடு முழுவதும் மார்ச் 10ஆம் தேதி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாயிகள் சங்க தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் அறிவித்துள்ளார். மேலும் அவர், 'டெல்லியை நோக்கிய போராட்டத்தில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. மார்ச் 6ஆம் தேதி நாடு முழுவதும் இருந்து விவசாயிகள் பஸ், ரயில்,விமானம் மூலம் டெல்லி வருகின்றனர். அப்போது அரசு போராட அனுமதிக்கிறதா, இல்லையா என பொறுத்திருந்து பார்ப்போம்' என்றார். விளை பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டபூா்வ உத்தரவாதம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்தி