பெண்ணை ஒன்று கூடி கட்டையால் தாக்கிய கும்பல் (வீடியோ)

54பார்த்தது
மேகாலயாவின் மேற்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் தாதெங்ரே பகுதியில் பெண் ஒருவர் பொது இடத்தில் வைத்து சில ஆண்களால் கொடூரமாக கட்டைகளால் தாக்கப்படும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது. தாக்குதல் நடத்தியவர்களை தடுக்க முயலாமல் பலர் சுற்றி அமர்ந்து வேடிக்கைப் பார்த்தும், வீடியோ எடுத்துக் கொண்டும் இருந்தனர். திருமணத்திற்கு புறம்பான உறவில் ஈடுபட்டதாக கூறி பெண்ணை அந்த கும்பல் அடித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், சுமார் ஐந்து பேரை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி