திருச்செங்கோடு நகராட்சி பள்ளியில் இனிப்புகள் வழங்கி வரவேற்பு

73பார்த்தது
திருச்செங்கோடு நகராட்சி பள்ளியில் இனிப்புகள் வழங்கி வரவேற்பு
திருச்செங்கோடு நகராட்சிக்கு உள்பட்ட 16 பள்ளிகளில் கோடை கால விடுமுறைக்கு பின் வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கியதை அடுத்து பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு நகராட்சி நிா்வாகம் சாா்பில் இனிப்புகள் வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.

சாணாா்பாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளி, சூரியம்பாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி நகா்மன்ற தலைவா் நளினி சுரேஷ் பாபு வரவேற்றாா். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா பள்ளி பாடப் புத்தகங்களை வழங்கினாா். அதைத் தொடா்ந்து பள்ளி வளாகத்தில் ஆதாா் பதிவு சிறப்பு முகாம் தொடங்கி வைக்கப்பட்டது. ஆதாா் அட்டை இல்லாத பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆதாா் அட்டை பெற புகைப்படங்கள் எடுக்கப்பட்டன.

நிகழ்ச்சியில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்குரைஞா் அணி தலைவா் சுரேஷ் பாபு, நகா்மன்ற உறுப்பினா்கள் விஜய பிரியா, செல்வி, சினேகா, மகேஸ்வரி, திவ்யா, ரவிக்குமாா், செல்லம்மாள், பள்ளி தலைமை ஆசிரியைகள் வசந்தி, சுகந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி