நாமக்கல் மாவட்டம் பட்டணம் பொன்மலை அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பொன்னேஸ்வர் ஆலயத்தில் நவகாலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு யாக பூஜை மற்றும் அபிஷேக ஆராதனைகள் நேற்றிரவு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டன.