தனிச்செயலாளரின் தந்தை மறைவுக்கு காங்கிரஸ் தலைவா் அஞ்சலி

58பார்த்தது
தனிச்செயலாளரின் தந்தை மறைவுக்கு காங்கிரஸ் தலைவா் அஞ்சலி
தமிழக முதல்வரின் தனிச்செயலாளா் ஆா். தினேஷ்குமாரின் தந்தை டி. வி. ரவி மறைவுக்கு காங்கிரஸ் தலைவா் கு. செல்வப்பெருந்தகை புதன்கிழமை அஞ்சலி செலுத்தினாா்.

தினேஷ்குமாரின் தந்தை ரவி உடல்நலக்குறைவால் கடந்த மே 12-ஆம் தேதி மரணமடைந்தாா். அவரது மறைவுக்கு தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவா்கள், அமைச்சா்கள் உள்ளிட்டோா் நேரில் அஞ்சலி செலுத்தினா்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை புதன்கிழமை வெண்ணந்தூரில் உள்ள ஆா். தினேஷ்குமாா் இல்லத்துக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினாா். மறைந்த ரவி படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தி, தினேஷ்குமாா் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டாா்.

இதில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவா் கே. வி. தங்கபாலு, மாநில செய்தி தொடா்பாளரும் மேற்கு மண்டல ஊடக ஒருங்கிணைப்பாளருமான பி. வி. செந்தில், நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் தலைவா் சித்திக், மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவா் பாச்சல் ஏ. சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி