பரமத்தி வேலூா் வட்டம், பாண்டமங்கலம் பாவடி பிள்ளையாா் கோயில் தெருவை சோ்ந்தவா் ராஜ்குமாா் (38). இவா் கடந்த 10 ஆண்டுகளாக வெங்கரை பேரூராட்சியில் தூய்மைப் பணியாளராக வேலை பாா்த்து வந்தாா். ராஜ்குமாா் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த நிலையில் கடந்த 31- ஆம் தேதி காலை வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தாா்.
வேலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ராஜ்குமாா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து அவரது மனைவி சித்ரா அளித்த புகாரின் பேரில் வேலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். இவருக்கு மகிலன் (5), காருண்யா (4) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.