பரமத்தி வேலூரில் ரூ. 62 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்

545பார்த்தது
பரமத்தி வேலூரில் ரூ. 62 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்
பரமத்தி வேலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 62 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம் போனது.

பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு, 2 ஆயிரத்து 571 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா்.

இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 24. 79-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 24. 30-க்கும், சராசரியாக ரூ. 23. 19-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 62 ஆயிரத்து 380-க்கு வா்த்தகம் நடைபெற்றது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி