ஜூன் 12ல் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் முகாம்

57பார்த்தது
ஜூன் 12ல் மின் நுகர்வோர்
குறை தீர்க்கும் முகாம்


ஜூன் 12ல்  மின் நுகர்வோர் குறை தீர்க்கும் முகாம் சங்ககிரியில் நடைபெறவுள்ளது.
இது குறித்து சங்ககிரி, மின்வாரிய செயற்பொறியாளர் உமாராணி தமது அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மேட்டூர் மின் பகிர்மான வட்டம், சங்ககிரி கோட்டத்தில் மாதாந்திர மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் ஜூன் 12ல், முற்பகல் 11: 00 மணி முதல் 01: 00 மணி வரை, செயற்பொறியாளர், இயக்கமும் பராமரிப்பும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், சங்ககிரி, அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளரால் நடத்தப்படவுள்ளது. சங்ககிரி கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்கள் மின்சாரம் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you