பொத்தனூர் பகுதியில் காவிரி ஆற்றில் குளிக்க தடை

67பார்த்தது
பொத்தனூர் பகுதியில் காவிரி ஆற்றில் குளிக்க தடை
பொத்தனூர் பகுதி மக்கள், காவிரியாற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என, செயல் அலுவலர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், தண்ணீர் அதிகளவில் வரும் என, எதிர்பார்க் கப்படுகிறது. இந்நிலையில் காவிரி ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவும், பிடிக்கவும் முன்னெச்சரிக்கையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. காவேரி ஆற்றில் தடையை மீறி குளித்தால் போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி